வரலாறு

94 ஆண்டுகளை கொண்டாடும் ஆனந்த பவன்

1924ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆனந்த பவன் உணவகம் சிங்கப்பூரின் மிகப் பழைமையான (புரதானம் வாய்ந்த) சைவ உணவகம். இந்த உணவகத்தில் தெற்கிந்திய உணவின் பாரம்பரியம் நிறைந்திருக்கும். லிட்டில் இந்தியாவின் விளிம்பில் அமையப்பெற்ற ஆனந்த பவனின் முதல் உணவகமானது 90 ஆண்டு கால வரலாறு நிரம்பியது. இது வாழ்வின் எல்லா துறைகளிருந்தும் வரும் மக்களுக்கு சேவை செய்கிறது.

மிக எளிமையாக சிலிகி சாலையில் துவங்கிய ஆனந்த பவன் தற்போது 5 கிளைகளை கொண்டுள்ளது. லிட்டில் இந்தியாவில் 2 கிளைகளும் சையது ஆல்வி சாலையில் 24 மணி நேர உணவகம் ஒன்றும், சாங்கி பிசினஸ் பார்க்கில் ஒரு கவர்ச்சியான கிளையும், மற்றுமொரு கிளை மிகவும் புதியதாக ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ளது.

ஆனந்த பவன் முன்னால் நிறுவனர்களான திரு. குழந்தைவேலுவும் அவரின் சகோதரர்களும் ஜப்பானியரின் ஆக்ரமிப்பிற்கு முன் சில உணவகங்களை நிறுவி வந்தனர். அதில் ஒன்று தொண்டூழியத்திற்கு வழங்கப்பட்டது. மற்றொன்று பறிமுதல் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆக்கிரமிப்பின் போது மூத்த ஊழியர் ஒருவர் ஆல்பர்ட் கோர்ட் மூலையில் வீசப்பட்ட வெடிகுண்டால் தாக்கப்பட்டார்.

திரு. குழந்தைவேலுவின் மறைவுக்குப் பிறகு அவரின் மைத்துனர் திரு. ராமசாமியால் நிருவிக்கப்பட்டது. அவரின் விடாமுயற்சியால் நன்கு நிறுவித்து பின் நிறுவனத்தின் பொறுப்புகளை திரு. குழந்தைவேலுவின் மனைவியிடமும் (திருமதி. காளியம்மாள்) அவரின் மகன்களான திரு ராமச்சந்திரன் மற்றும் திரு நடராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

 இளமை மற்றும் செயல் துடிப்பு நிறைந்த திரு. நடராஜன் தனது படிப்பை கைவிட்டு விட்டு, குடும்ப வணிகத்திற்காக சேவை செய்ய தொடங்கினார். இவர் ஆனந்த பவனின் நிதி மாற்றத்திற்கு கருப்பொருள் ஆவார். பிறகு திரு. நடராஜன் தன் நிர்வாக கடைமைகளை திரு ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.                   

திரு ராமச்சந்திரன் புதிய புரட்சியாக பல புதிய தொழிநுட்பங்கள் மூலம் இந்திய உணவு வகைகளை தயாரித்து அறிமுகம் செய்தார். அவர் வெற்றிக்கரமாக சீருடை முறையில் உயர் தரமான சீரான உணவு தயாரிக்கும் உத்தியை பயிற்சித்து வெற்றியும் அடைந்தார்.

ஆனந்த பவனில் தற்போது மிக அற்புதமாக தேர்வு செய்யப்பட்ட தென் இந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகளையும், இந்திய மற்றும் சீன உணவு வகைகளையும் இணைத்து பரிமாறுகின்றனர். வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உயர்தர பாரம்பரிய உணவு வழங்குவதில் பிரபலமான ஆனந்த பவன், மக்கள் நலனையும் மனதில் கொண்டு செயற்கை வேதிப்பொருட்கள், MSG செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பதில்லை. பயன்படுத்தப்பட்ட எண்ணையை மறுபயனீடு செய்வதில்லை.

எங்கள் மைய சமையல் அறை, எங்கள் மொத்த உணவு தயாரிப்புக்காக நவீன விஞ்ஞான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்திய உணவு உலகில் தனித்துவமானதும், முதன்மையானதுமாகும். இவ்வாறு தயாரிக்கப்படும் உணவின் தரத்தையும் ஊட்டச்சத்து அம்சத்தையும் சமரசம் செய்யாமல் இந்திய சைவ உணவுப்பொருட்களில் உணவு தயாரிப்பதில் ஒரு புரட்சிகர வேகத்தை ஏற்படுத்துகிறோம்.

சித்தா மற்றும் ஆயுர்வேதத்தின் பண்டைய ஞானத்துடன் சிறந்த சைவ உணவுப்பொருட்களை பிரதானமாக வழங்கி வருகிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு உறுதியான நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சேவை இதுவே எமது ஊழியர்களின் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

  • முதல் கிளை 221 சிலிகி சாலை

    சிங்கப்பூரில் 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆனந்த பவன் உணவகம் பழமையான இந்திய சைவ உணவகமாகும். அதன் தாழ்மையான பாரம்பரியம் 221 சீலை சாலை தொடங்கி பல தலைமுறைகளாய் தொடர்கிறது. இது 2018 ஆம் ஆண்டு ஜூன் 23 வரை பல தசாப்தங்களாக அதன் அசல் கட்டிடத்தில் உள்ளது. வடக்கு-தெற்கு பாதையமைப்பிற்கு வழிவகுக்கும் வகையில், எலிசன் கட்டிட்டத்தில் அதன் சேவை தற்போது நிறுத்தப்படுகின்றது.

  • இரண்டாவது கிளை 58 சிராங்கூன் சாலை

    இரண்டாவது கிளை 58 சிராங்கூன் சாலை விரைவு மற்றும் சுய சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. லிட்டில் இந்தியாவின் சந்தை, கோவிலுக்கு அல்லது நண்பர்களை காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வருகின்றனர். 3வது தளத்தில் கேட்டரிங் அலுவலகம் உள்ளது. தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு உணவு பூர்த்தி செய்ய விரும்புவோர் அங்கு பதிவு செய்யலாம்.

     

  • மூன்றாம் கிளை 663 பப்பலோ சாலை

    மூன்றாவது கிளை புளோக் 663 பப்பலோ சாலையில் உள்ளது. தேக்கா சந்தை, மளிகை, நகைக்கடை மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தம் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. பொருட்கள் வாங்கும் வேலைகளுக்கிடையில் உணவு உண்ண விரும்புவோர் சிராங்கூன் பெரிய சாலையை கடக்காமல் இங்கே உணவு உண்ணலாம்.

     

  • நான்காம் கிளை 95 சையது ஆல்வி சாலை

    4வது கிளை பெரிய தரை பரப்பளவுடன் 95 சையது ஆல்வி சாலையில் துவங்கப்பட்டது. அப்போது சையது ஆல்வி சாலையில் மிக குறைவான உணவு விடுதிகளே இருந்தது. அந்த இடம் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொருட்கள் வாங்குவோருக்கும் மிக சிறந்தது.

    இங்கு முதன் முதலாக ஜெயின் உணவு அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிறைய வட இந்திய உணவுகளான சாட், தந்தூர் மற்றும் தாலி அறிமுகம் செய்யப்பட்டது. மேற்கிந்திய உணவான சைவ பர்கரும் பீட்சாவும் இங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

    நள்ளிரவுக்குப் பிறகு சைவ உணவு கிடைக்க சிரமப் படுவோருக்காக இந்த கிளை 24மணி நேர சேவையாக மாற்றம் கண்டது.

    120 நபர்கள் அமரும் வகையில் மண்டபம் ஓன்று அமைக்கப்பட்டு அதில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.

     

  • தலையாய கிளை சாங்கி விமான நிலையம்

    ஆனந்த பவன் தன் அடையாள கிளையை சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைத்தது.

    இது ஒரு 24 மணி நேர உணவகமாகும். விமான நிலையத்தில் உணவகம் அமைப்பது மிகவும் சவாலாக இருக்கும்.

    மிக உயர்தர மற்றும் கடின விதிகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்பட்டது.

    சர்வதேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆனந்த பவன் தனது வழக்கமான நடைமுறையையும் வடிவமைப்பையும் மாற்றம் செய்வதற்கு ஒரு படி கல்லாக அமைந்தது.

    இந்தியரின் பாரம்பரியான உணவான அப்பம் தயார் செய்ய நீண்ட நேரம் ஆகும்.அதை முறியடிக்க இப்ப அப்பம் இங்கே'இண்டக்சன் குக்கர் 'மூலம் முதல் முறையாக சமைக்கப்பட்டது.

    தானியங்கி மேஜை அடையாளங் காட்டும் முறையும் டிஜிட்டல் திரையில் சாப்பாட்டு பட்டியலும் இங்கு தான் அறிமுகம் செய்யப்பட்டன. அதிக மக்கள் நடமாடும் சூழலில் உணவகம் அமைந்ததில் அதற்கு உரிய சவால்களை ஆனந்த பவன் நோக்க நேரிட்டது.

    விமான தாமத்தால் வரும் திடீர் பயணிகளை சமாளிக்க நேரிடும். வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் போது திடீரென்று அதிக மக்கள் வரிசையில் நிற்பர்.சமையல் குழுவினர் அவசரமாக இத்தகைய எதிர்பாராத நிகழ்வுக்கும் சமைக்க நேரிடும்.

    நிறைய சர்வதேச பயணிகளும் பல முக்கிய நிபுணர்களும் இங்கு வழக்கமாக வருகை புரிவர். திறந்தவெளியில் சொகுசாக ஒரு மூலையில் இந்த உணவகம் அமைந்திருப்பது ஒரு கூடுதல் சலுகையாக அமைந்துள்ளது.

    6 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடையும் வரை செயல்பட்டது.

     

     

  • ஆறாவது கிளை சாங்கி பிஸினஸ் பார்க்

    ஆறாவது கிளை சாங்கி பிஸினஸ் பார்க்கில் அமைந்துது.

    பல தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ. டி. நிறுவனம், நிதி மற்றும் சேவை போன்ற நிறுவனங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. இந்த கிளை சாங்கி எக்ஸ்போ கண்காட்சி அரங்கம் அருகே உள்ளது.

    இந்த கிளை திறந்த பாணி அமைப்பு உடையது. இது அங்கு செல்லும் வழிப்போக்கர் அனைவருக்கும் மிகச்சிறந்த வரவேற்பு வழங்கி வருகிறது.

  • புதிய கிளை 448 கிராங்கூன் சாலை

    புதிய கிளை 448 கிராங்கூன் சாலையில் உள்ளது.

    பரப்பரப்பான சிராங்கூன் சாலையிலிருந்து அருகே அமைந்துள்ள இந்த கிளையில் நிறைய சத்தான உணவு வகைகளை ஆனந்த பவன் தனது வாடிகையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    கேழ்வரகு கூழ், ஆரோக்கியமான தானிய சாதம் மற்றும் பலவிதமான ஆரோக்கியமான உணவு வகைகளையும் சுகாதாரத்தை விரும்பும் வாடிகையாளர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    இட்லி, பர்கர் மற்றும் கருப்பு மிளகு மசாலா தோசை போன்ற வித்தியாசமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

  • ஆனந்த பவன், சிங்கப்பூரிலேயே மிகப்பெரிய முருக்கை தயார் செய்து சிங்கப்பூர் வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஒற்றை முருக்கான இது, ஒரு சின்ன முறிவுமின்றி 97 செ.மி விட்டம் அளவுக்கொண்டது. தாமான் ஜீரோங் சமூக மன்றமும் IAEC கூட்டாக ஏற்பாடு செய்த தீபாவளி திருவிழா ஒன்றில் IAECடன் கூட்டு சேர்ந்து ஆனந்த பவன், தீபாவளி திருவிழாவில் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தகல்வல்களுக்கு http://singaporerecords.com/largest-murukku/